தமிழ் மா மன்றம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே பல போட்டிகளை நடாத்தி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை விவாத பயிலரங்கு நிகழ்வினை நடாத்தியுள்ளதுடன் அம் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சான்றிதழ்களையும் வழங்கியது.
இந் நிகழ்வில் வவுனியாவின் மூத்த தமிழ் ஆசிரியர் இலக்கியச் சுடர் கதிர்காமசேகரன் கலந்து கொண்டு மாணவர்கள் விவாத போட்டிகளில் பங்கு பற்றும் முறைகள் பற்றியும் விவாதிக்கும் முறைகள் பற்றியும் கருத்துரை வழங்கினார்.
















