ஜெயலலிதாவுக்கு ஜெயில்: குஷியில் சுப்பிரமணிய சுவாமி டுவிட்

subramanianswamyஜெயலலிதாவிற்கு சிறைதான் என சுப்பிரமணிய சுவாமி டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சிறை (ஜெயில் ஃபார் ஜெயலலிதா=ஜெ.ஜெ) என இன்று மதியம் தனது டிவிட்டர் தளத்தில் வெளிட்ட சுப்ரமணிய சுவாமி கூறியதாவது, கடந்த 1996ம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்தேன்.

அதன்பிறகு கருணாநிதி முதல்வராக இருந்தபோது அதை அரசு சார்பில் நடத்த அனுமதி கேட்டார். நானும் அனுமதியளித்தேன்.

இப்போது வழக்கு தீர்ப்பால் கிடைக்கும் பெயரை கருணாநிதி பெற முயலுவார். 2ஜி வழக்கில் எனது வழக்கு வெற்றி பெற்றால் அப்போது ஜெயலலிதா மகிழ்ச்சியடைவார்.

அதேபோல் சொத்துக்குவிப்பு வழக்கில் நான் வென்றுள்ளதையும் பார்த்து ஜெயலலிதா மகிழ்ச்சியடைய வேண்டும் என டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply