ஜெயலலிதாவுக்கு தண்டனை. இனிப்பு வழங்கி கொண்டாடிய விஜய் ரசிகர்கள். பரபரப்பு தகவல்

jaya-vijayபெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்த தீர்ப்பு வெளிவந்தவுடன் திரையுலகில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

நடிகர் விஜய் படங்களுக்கு தொடர்ந்து திராவிட ஆட்சியில் மாறி மாறி தடங்கல் வந்துகொண்டே இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் அவருடைய படங்களை திரையிட முடியாமல் மேலிடம் தடங்கல் செய்தது போலவே அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் விஜய்க்கு பிரச்சனைகள் வந்துகொண்டே இருந்தது. விஜய் நடித்த தலைவா படம் பெரும் பிரச்சனைக்கு இடையே வெளிவந்து தோல்வியும் அடைந்தது.

தற்போது தீபாவளிக்கு வெளிவர இருக்கும் கத்தி படத்திற்கு என்ன பிரச்சனை எப்போது வருமோ என படக்குழுவினர் பதட்டமாகவே இருந்தன. விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததால் விஜய் ரசிகர்கள் கொதிப்பில் இருந்தனர். ஆனால் அதிகாரமிக்க ஒரு தலைவியுடன் நேரடியாக மோத விரும்பாமல் அடக்கி வாசித்தனர்.

இந்நிலையில் இன்று ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், விஜய் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த முதல்வர் தங்கள் தலைவர் விஜய்தான் என வெளிப்படையாகவே ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் விஜய் இந்த தீர்ப்பு குறித்து எவ்வித கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply