ஜனாதிபதி மஹிந்த பான் கீ மூனை சந்தித்தார்

mahinda-bankimoonஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்தித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நாட்டின் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பான் கீ மூனிடம் விளக்கியுள்ளார்.

நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது பான் கீ மூன் எவ்வாறான கருத்துக்களை வெளியிட்டார் என்பது பற்றிய தகவல்கள் முழுமையாக இன்னமும் வெளியாகவில்லை.

Tags: , ,

Leave a Reply