ஜெயலலிதாவை போல் சோனியா, ராகுலை சிறைக்கு அனுப்புவேன்: சுப்பிரமணியசாமி ஆவேசம்!

subramanian-swamyஜெயலலிதாவுக்கு அடுத்தப்படியாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே எனது வேலை என்று சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கை 1996 ஆம் ஆண்டு தொடர்ந்தவர் சுப்பிரமணியசாமி. அவர் இந்த தீர்ப்பு பற்றி கருத்து தெரிவிக்கையில், ”ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை அபாரமானது, அவர் ஊழல்வாதியே.

அவர் ஊழல்வாதி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார் என்றால் ஒரு இந்தியனாக எனக்கு பெருமையாக இருக்கிறது. ரூ.100 கோடி அபராதம் என்பது ஜெயலலிதாவுக்கு ஒன்றுமே இல்லை.

மேலும், ஜெயலலிதாவுக்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே எனது வேலை. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுலை ஜெயிலில் வைக்கும் பணியினை செய்ய உள்ளேன். இது அநேகமாக கிறிஸ்துமஸ்க்குள் நடைபெறும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply