ஜப்பானில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறி 32 பேர் பலி. மீட்புப்பணிக்கு ராணுவம் விரைந்தது.

mount-ontake-japan-volcanoஜப்பானில் உள்ள எரிமலை ஒன்று வெடித்து சிதறியதால் ஏற்பட்ட பயங்கர சம்பவத்தில் இதுவரை சீற்றத்தில் சிக்கி 32 பேர் பலியாயினர். 45 பேர்களுக்கும் மேல் மாயமாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் உள்ள Mount Ontake என்ற பகுதியில் உள்ள எரிமலை அவ்வப்போது வெடித்து சிதறி லாவா என்னும் தீக்குழம்பை வெளிப்படுத்துவது உண்டு. இந்த எரிமலை ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எரிமலையின் உயரம் 3067 மீட்டர் ஆகும்.

கடந்த வெள்ளியன்று இந்த Mount Ontake என்ற எரிமலை ஜப்பான் நேரப்படி 11.53 மணிக்கு திடீரென பயங்கரமாக வெடித்துச் சிதறியது. எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென வெடித்து சிதறி தீக்குழம்பை கக்கியதால் அந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கடும் பாதிப்பு அடைந்தனர். வெடித்து சிதறிய தீக்குழம்பில் சிக்கி 31 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஆயினும் இன்னும் பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தற்போதும் இந்த எரிமலையின் சீற்றம் தணியவில்லை.அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகவும், சாம்பலாகவும் காணப்படுகிறது. ஜப்பான் பிரதமரின் உத்தவுப்படி ஜப்பானில் உள்ள மீட்புப்படையினர்களும், ராணுவமும் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அங்கு சிக்கியிருந்த பொதுமக்களை காப்பாற்றினர்.

Tags: , ,

Leave a Reply