கதாநாயகிகள் அனைவருக்கும் ஒரே கனவு தான், எப்படியாவது அஜித், விஜய்யுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான்.
ஏனென்றால் இவர்களுடன் நடித்து படம் ஹிட் ஆனால் தன் திரைப்பயணம் உச்சத்தை தொடும் என்று ஒரு எண்ணம்.
ஆனால் இந்த நடிகைகளுக்கு அப்படியே தலைகீழ் ஆகிபோனது.
ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடித்த காஜல் அகர்வால் மற்றும் வீரம் படத்தில் அஜித்துடன் நடித்த தமன்னாவிற்கு சோகமே விடையாக கிடைத்துள்ளது.
இந்த படங்கள் ஓடினாலும் இவர்கள் கையில் ஒரு படம் கூட தற்போது இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.
















