உலகின் மோசமான மனிதர்களை வரிசைப்படுத்தி, ‘The All Time Worst People in history’ என்ற தலைப்பில் ‘ரேங்கர்.காம்’ (www.ranker.com) எனும் இணையதளம் புள்ளி விபரங்களோடு விபரம் வெளியிட்டிருக்கிறது. தொடர்ந்து வாக்கு பதிவு நடந்து வருகிறது. மோசமான மனிதர்கள் என்றால் (லைக் பட்டனை அழுத்தவும்), இல்லையென்றால் (டிஸ்லைக் பட்டனை அழுத்தவும்).
அதில் முதலிடம் ரஷ்யாவின் சர்வாதிகாரியாக இருந்த ஜோசப் ஸ்டாலினுக்கு. 2வது இடம் சர்வாதிகாரி இட்லருக்கு. 3வது இடம் போல் வாட், 4வது இடம் ஓசாமா பின்லேடன், 5வது இடம் இடி அமீன் என்ற வரிசையில் நம்ம ஊர் மு.கருணாநிதி 8வது இடத்திற்கு வந்திருக்கிறார்.
ஊழலில் மற்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முந்திக்கொண்டு வருபவர், ‘மோசமான மனிதர்கள்’ பட்டியலில் இலங்கையின் கொடுங்கோலன் ராஜபக்சேக்கு அடுத்ததாக 20 க்குப்பின் இருந்த கருணாநிதி, தற்போதுள்ள நிலவரப்படி ராஜபக்சேயை (14 வது இடம்) பின்னுக்கு தள்ளி விட்டு 8வது இடத்திற்கு முன்னணிக்கு வந்திருக்கிறார்.
கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த தயாநிதி மாறன் 25வது இடத்திலும், கனிமொழி 42, கலாநிதி மாறன் 47, மு.க.ஸ்டாலின் 53 என்ற வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
ஈராக் சர்வாதிகார அதிபராக இருந்து, அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட சதாம் உசேன் 10வது இடத்திலும், சுப்பிரமணிய சாமி 18வது இடத்திலும், ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே 11வது, இன்னொரு தம்பி பசில் ராஜபக்சே – 21, சோனியா காந்தி- 28, ப.சிதம்பரம்-37, நித்தியானந்த சாமியார் – 44, ஜார்ஜ் புஷ் (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி) – 48, திராவிடர் கழக கி.வீரமணி – 60, ராகுல் காந்தி – 64, ஜெயலலிதா – 70, நடிகை குஷ்பூ – 124, லல்லு பிரசாத் யாதவ் – 141, சந்திரிகா குமாரதுங்கா (இலங்கையின் முன்னாள் அதிபர்) – 146வது இடத்தில் அணி வகுக்கிறார்கள்.
ஆக தமிழக மற்றும் இந்திய அரசியல் தலைவர்கள் இப்படி ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளனர்.
கீழே வாக்களிக்கும் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மனதில் இருக்கும் மோசமான மனிதர்களுக்கு வாக்களியுங்கள்.
http://www.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history
















