காணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்! அரசாங்கம் தீர்மானம்

lk-missing-deadஇலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விடுதலைப் புலிகளுடன் இறுதிக் கட்டப் போர் நடைபெற்ற போது இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயினர்.

அவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போனவர்களை மரணித்தவர்களாக கருதி சான்றிதழ் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நஷ்டஈடு வழங்கி, மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்கும் பட்சத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளைத் திருப்திப்படுத்திவிட முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

Tags: , ,

Leave a Reply