ஜெயக்குமாரியை விடுதலை செய் ; கொழும்பில் ஆர்ப்பாட்டம்

jeyakumari பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவர் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி பல போராட்டங்களில் கலந்துகொண்டார். இந்நிலையில் அவரும் அவரது மகள் விபூசிகாவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் ஜெயக்குமாரியை விடுதலைசெய்யுமாறு கோரி பிரசார அமைப்பினால் இந்தஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி, ஐக்கிய சோசலிஷக் கட்சியின் பொதுச் செயலளார் சிறிதுங்க ஜயசூரிய உட்பட அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல்போனோரின் உறவுகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Tags: , ,

Leave a Reply