வவுனியா, வைரவபுளியங்குளம், ஸ்ரேசன் வீதியில் நேசன் ரவல்ஸ் அன்ட் ரூர்ஸ் தனியார் நிறுவனத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் திறந்து வைத்தார்.
நேற்று திங்கள் கிழமை இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, இந்திய துணைத்தூதர் சு.தட்சணாமூர்த்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான சிவநாதன் கிசோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த தனியார் நிறுவனம் வடமாகாணத்தில் கைத்தொழில் நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புக்களை வழங்கவுள்ளதுடன் வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் செயற்படவுள்ளது.
















