வடக்கில் இன்னும் புலிகளின் தலைவர்கள்… புதுக்கதை கட்டும் இலங்கை அரசு.

LTTEவடக்கில் இன்னும் சுமார் 2500 வரையான விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் மறைந்திருப்பதாக அரசாங்கம் புதுக்கதை கட்டிவிட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது.

நாட்டில் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுக்காததே அதற்கான காரணமாகும். இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தயவுடன் வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அரசாங்கம் நாடியுள்ளது. அதன் முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 2500 வரையான விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மறைந்து வாழ்வதாக அரசாங்கமே புரளியொன்றைக் கிளப்பி விட்டுள்ளது. மேலும் எதுவித புனர்வாழ்வுக்கும் உட்படுத்தப்படாத இவர்கள், எதிர்வரும் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்கம் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

Tags: , ,

Leave a Reply