ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் இலக்குகளை அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் நேற்று முதல்முறையாக பிரிட்டன் ராணுவம் இந்த தாக்குதலில் கலந்துகொண்டது. பிரிட்டனை சேர்ந்த விமானப்படை தீவிரவாதிகளின் இலக்குகளை நோக்கி நேற்று சக்திவாய்ந்த குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் பல இலக்குகள் தரைமட்டமாகிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றான.
பிரிட்டன் ராணுவத்தின் RAF என்ற ஜெட் நேற்று ஈராக்கில் உள்ள தீவிரவாதிகளை நோக்கி படுபயங்கரமான தாக்குதலை நடட்த்ஹியது. இந்த தாக்குதல்களை பிரிட்டன் ராணுவத்தினர் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
பிரிட்டனின் Defence Secretary Michael Fallon இந்த தாக்குதலை உறுதி செய்தார். முதல்கட்டமாக ஈராக்கில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அடுத்த கட்டமாக இந்த தாக்குதல் சிரியாவின் மீதும் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளை ஒழிப்பதில் அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க உள்ளதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை உலகில் இருந்து ஒழிப்பதே பிரிட்டனின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
















