இளம்பெண்களுக்கு பொதுவாக தலையில் முடிவளர்க்கும் பழக்கம் மட்டுமே உண்டு. ஆனால் ஒரு இளம்பெண் தனது வயிற்றினுள் முடியை வளர்த்துள்ளார். ஆம் இவருக்கு சிறுவயதில் இருந்தே முடியை உண்ணும் வழக்கம் இருந்ததாம். தற்போது மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்து 4கிலோ அளவுள்ள பந்துபோன்ற முடியை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர்.
Kyrgyzstan என்ற நாட்டை சேர்ந்த Ayperi Alekseeva என்ற நகரில் வாழும் 18 வயது இளம்பெண் Miss Alekseeva, என்பவர் சில நாட்களாக சாப்பிட முடியாமல் மெலிந்து கொண்டே போனார். ஒரு கட்டத்தில் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டார். பின்னர் அவரை அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்தபோது அவரது வயிற்றில் முடியால் ஆன பெரிய கட்டி ஒன்றை இருப்பதை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் மூலம் கண்டுபிடித்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவரது உயிருக்கே அது ஆபத்தாகக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கருதிய மருத்துவர்கள் Miss Alekseeva பெற்றோர்களின் சம்மதத்துடன் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.
Bahadir Bebezov, என்பவர் தலைமையில் அடங்கிய மருத்துவர் குழு சுமார் நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து 4 கிலோ எடையுள்ள தலைமுடி கட்டியை வெளியே எடுத்தனர். தற்போது அந்த பெண் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
















