பருத்திவீரன் என்ற ஒரே படத்தில் தமிழ் மக்கள் அனைவரின் மனதிற்குள் இடம்பிடித்தவர் ப்ரியா மணி.
பின் தொடர்ச்சியான தோல்விகளால் தமிழ் சினிமாவிற்கு சில நாட்கள் டாட்டா காட்டி விட்டு கன்னட திரையுலகம் பக்கம் திரும்பினார்.
தற்போது எங்கும் அவருக்கு மார்க்கெட் இல்லாததால் அவர் வீட்டில் திருமண ஏற்பாடுகள் அவசரமாக நடந்து வருகிறது.
மேலும் ஏற்கனவே திருமணமான பிரபல தொழில் அதிபர் ஒருவர் பிரியாமணியை இரண்டாவது மனைவியாக வைத்துக் கொள்ள விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ப்ரியா மணி ’ஒரு தொழில் அதிபருக்கு 2–வது மனைவியாக இருக்கமாட்டேன்.
அதைவிட சினிமா ஒளிப்பதிவாளருக்கு முதல் மனைவியாக இருப்பது மேல்.
தலைவிதி எப்படி இருக்கிறதோ அதன்படி நடக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
















