பயிற்சியில் ஈடுபட்ட முற்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்

vau-acc6பயிற்சியில் ஈடுபட்ட முற்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று (01) சாரதி ஓட்டுனர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த முற்சக்கரவண்டியொன்று ஹன்ரர் ரக வாகனத்தில் மோதுண்டதில் மூவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

தாண்டிக்குளம் பகுதியில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக சாரதி பயிற்சி நிலையங்களினால் பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில் சாரதி பயிற்சி நிலையமொன்றின் முற்சக்கரவண்டியில் பயிற்றுவிப்பாளருடன் பயிற்சியில் ஈடுபட்ட ஒருவர் ஏ9 வீதியில் முற்சக்கரவண்டியை திருப்ப முற்பட்டவேளையில் பின்னால் இருந்து வந்த ஹன்டர் ரக வாகனம் மோதியதிலேயே மூவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: ,

Leave a Reply