கிராமசேவகரின் செயற்பாட்டை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்! வவுனியாவில் சம்பவம்

vau-demo3கிராமசேவகரின் செயற்பாட்டை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்! வவுனியாவில் சம்பவம்

வவுனியா, கற்பகபுரத்தில் கிராமசேவகரை தாக்கியதாக பொய்கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவிக்ககோரியும் கிராம சேவையாளரின் செயற்பாட்டை கண்டித்தும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதன்கிழமை (01) இடம்பெற்ற இவ் ஆர்பாட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கற்பகபுரத்தை சேர்ந்த இருவரை கிராம சேவகர் கொடுத்த பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று செவ்வாய்கிழமை வவுனியா பொலிஸார் கைது செய்யப்பட்ட இருவரும் கிராம சேவையாளரை தாக்கவில்லை எனவும் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கற்பகபுரம் கிராம மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டுத்திட்ட நடவடிக்கைகளில் எமது பகுதி கிராம சேவையாளர் பரபட்சமாக நடந்துகொள்வமதாகவும் அவரே பொய் கூறி இருவரை சிறை அனுப்பியுள்ளதாகவும் இக் கிராம சேவையாளரை உடனடியாக மாற்றவேண்டும் எனவும் ஆர்பாட்டக்காரர்கள் கோரினர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்கரர்கள் ஐவரை அழைத்த வவுனியா அரசாங்க அதிபர் விபரங்களை அறிந்ததுடன் இது தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறும் தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Tags: ,

Leave a Reply