300 மீ நீளத்தில் கண்ணாடியினால் ஆன பாலம். சீன பொறியாளர்கள் சாதனை.

glass-bridge-in-chinaசிமெண்ட் கான்கிரீட்டினால் பாலம் கட்டுவார்கள், இரும்பினாலும் பாலம் கட்டுவார்கள், ஏன் மரத்தினால்கூட சில பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் முழுக்க முழுக்க கண்ணாடியினால் ஆன பாலத்தை பார்த்து உள்ளீர்களா? சீனாவில் கண்ணாடியினாலே ஒரு அற்புதமான பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதுவும் தரையில் இருந்து 180 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

தெற்கு சீனாவில் உள்ள Pingjiang county, in the province of Hunan, என்ற பகுதியில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள்ள 300 மீட்டர் நீளமுள்ள ஒரு பாலத்தை முழுக்க முழுக்க கண்ணாடியினால் ஆன நடைபாதையை கொண்டு ஒரு பாலத்தை கட்ட சீன பொறியாளர்கள் முடிவெடுத்து அதை தற்போது வெற்றிகரமாக கட்டியும் முடித்துவிட்டனர். இந்த பாலத்தை கட்டி முடிக்க சுமார் 6000 கன அடி கண்ணாடிகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாலத்தில் நடந்து செல்வது அற்புதமான த்ரில் அனுபவம் என்று கூறுகிறார் 23 வயது சுற்றுலா பயணி Yun Ku. இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து செல்வது அந்தரத்தில் நடந்து செல்வது போன்ற ஒரு பிரம்மை ஏற்பட்டதாகவும், இதுபோன்ற அனுபவத்தை தன் வாழ்நாளில் கண்டதில்லை என்றும் அவர் மேலும் கூறினார். இந்த பாலத்தில் நடந்து செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

Tags: , ,

Leave a Reply