ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக பதவி வகிக்க முடியும் என்பதனை தெளிவுபடுத்த நாடு முழுவதிலும் ஆளும் கட்சி கருத்தரங்குகளை நடத்த உள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறான ஓர் நிலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவது சட்டவிரோதமானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஜே.வி.பி கட்சி உள்ளிட்ட தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.
எனினும், மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி பதவி வகிப்பதில் சிக்கல் கிடையாது என ஆளும் கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் கிடையாது என்பதளை தெளிவுபடுத்தும் வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இந்த விசேட கருத்தரங்குகள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட உள்ளன.
















