பாடசாலை வாகனத்திற்குள் மாணவி வல்லுறவு – கண்டியில் நடந்த கொடுமை !

Sexual-Abuse9கண்டியில் பாடசாலை மாணவியொருவரை பாடசாலை வானுக்குள் வைத்து பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய வான் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இக் கொடூர சம்பவமானது சர்வதேச சிறுவர் தினமான நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து மேற்படி சாரதி கண்டி சிவப்பு மதகு பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடந்த சில வருடங்களாக குறித்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மாணவி கண்டி பிரபல பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்விகற்று வந்துள்ளார். குறித்த பாடசாலை வாகனம் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்டு காணப்படும் அதேவேளை, அகில இலங்கை அனைத்து மாவட்ட பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சங்கத்தில் பதிவுசெய்யப்பட்டும் உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையெனவும் 37 வயதானவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply