விஜய், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள கத்தி’ திரைப்படத்தின் டீசரும், ஷங்கரின் ‘ஐ’ படத்தின் டீசரும் மூன்று நாள் இடைவெளியில்தான் ரிலீஸ் ஆனது. ஆனால் சமூல வலைத்தளத்திலும் இணையத்திலும் விஜய்யின் கத்தியை விட ஷங்கரின் ‘ஐ’ டீஸர் மிக வேகமாக பரவி வந்துள்ளது என கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸான ‘ஐ’ படத்தின் டீஸர், வெளியான 10 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. அதுமட்டுமின்றி தற்போது 70 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டி ஒரு கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
ஆனால் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த விஜய்யின் கத்தி டீஸர் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையிலும் 20 லட்ச பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. விஜய்யின் முந்தைய படங்களான தலைவா மற்றும் ஜில்லா படங்களின் டீஸர் இதைவிட அதிகமான பார்வையாளர்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான நடுநிலையான பார்வையாளர்கள் ‘ஐ’ டீசருடன் ஒப்பிடும்போது ‘கத்தி’ டீசர் படுமொக்கையாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கள் விஜய்க்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
















