வவுனியாவில் கிராம அலுவலர் இராணுவத்துடன் சென்று மிரட்டல்? நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகவும் குற்றச்சாடடு!

lk-army2வவுனியா, பழைய கற்பகபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் அப் பகுதி கிராம அலுவலர் இராணுவத்தை அழைத்து வந்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அச்சத்துடனேயே தாம் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த செவ்வாய்கிழமை கற்பகபுரம் கிராம அலுவலரை தாக்கியதாக கிராம அலுவலர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பழைய கற்பகபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை செவ்வாய் இரவு 9 மணியளவில் வவுனியா பொலிசார் கைது செய்தனர்.

இதனையடுத்து கிராம அலுவலரை குறித்த இருவரும் தாக்கவில்லை எனவும் கிராம அலுவலர் பொய்முறைப்பாடு பொலிசில் செய்துள்ளதாகவும் அவரை இடம்மாற்றுமாறும் கோரி அப் பகுதி மக்கள் புதன்கிழமை வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது இப் பிரச்சனை தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதேவேளை பொலிசாரால் கைது செய்யப்பட்ட இருவரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று(02) வியாழக்கிழமை குறித்த இரு நபர்களின் வீட்டுக்கும் சீருடை தரித்த இராணுவத்தை அழைத்துச் சென்ற கிராம அலுவலர் அவர்கள் மூலம் தமக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். நீதிமன்ற விசாரணையில் குறித்த சம்பவம் இருக்கும் போது எவ்வாறு இராணுவத்தை இப் பிரச்சனை தொடர்பில் தமது வீட்டுக்கு அழைத்து வர முடியும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, இராணுவத்தினர் சென்ற போது கிராம அபிவிருத்திச் சங்க தலைவரின் வீட்டில் வயது முதிர்ந்த அவரது மனைவியும் விசேட தேவைக்குட்பட்ட மகளும் மாத்திரமே நின்றுள்ளனர். இதனால் அவர்கள் இச் சம்பவம் தொடர்பில் அச்சமடைந்துள்ளனர். அப்போது அயலில் உள்ள பெண் ஒருவரே வந்து குறித்த இராணுவத்துடன் கதைத்து பிரச்சனையை தெளிவுபடுத்தி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை, குறித்த கிராம அலுவலர் தற்போது புதிதாக நியமனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply