இறைச்சி மீதுள்ள காதலால் காவலர்களிடம் சிக்கிய இளம்பெண்

chicken65சுவிட்சர்லாந்திற்கு வந்த பெண் ஒருவர் குறிப்பிடப்பட்ட அளவைவிட 70 மடங்கு அதிகமாக இறைச்சியை கொண்டு வந்ததால் எல்லை காவலர்களிடம் வசமாக சிக்கியுள்ளார்.
சுவிஸின் பேஸல் நகரத்தில் வாழும் 27 வயது ஸ்பானிய பெண் ஒருவர் ஜேர்மனியில் இருந்து பேஸல் நகரத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த போது எல்லை காவலர்ளிகடம் மாட்டி கொண்டுள்ளார்.

அந்த பெண் இரண்டு ஷாப்பிங் ட்ராலிகள் முழுவதும் நிரம்பும் அளவிற்கு பன்றி மற்றும் கோழி இறைச்சியும், இரண்டு பைகள் நிறைய சமையல் எண்ணெய்யும் வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸில் கடந்த யூலை மாதம் 1ம் திகதி பிறப்பிக்கப்பட்ட புதிய இறக்குமதி சட்டத்தின் படி ஒரு நபர் ஒரு கிலோ இறைச்சி மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்.

அந்த அளவிற்கு மேல் எடுத்து செல்லப்படும் ஒவ்வொரு கிலோவிற்கும் 17 ப்ரான்குகள் அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில் குறிப்பிட்ட அளவினை விட இந்த பெண் 70 மடங்கு அதிகமாக இறைச்சி வைத்திருந்ததாலும், 5 மடங்கு அதிகமாக சமையல் எண்ணெய் வைத்திருந்ததாலும் 1,173 ப்ரான்குகள் வரை அபராதமாக பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply