இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனும் தங்கள் மகன் ஜார்ஜை ரகசியமாக புகைப்படம் எடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள பாட்டெர்சீ பூங்காவில் குட்டி இளவரசன் ஜார்ஜ் தனது பாட்டி ராணி எலிசபெத்துடன் விளையாடிகொண்டிருந்ததை பாப்பராஸி என்றழைக்கப்படும் ரகசிய புகைப்படக்காரர் ஒருவர் படமெடுக்க முயன்றுள்ளார். இதையடுத்து அந்த நபர், பூங்காவிலிருந்து உடனடியாக அப்புறபடுத்தப்பட்டுள்ளார்.
இந்த செயலினால் கடும் அதிருப்திக்குள்ளான வில்லியம் மற்றும் கேட் மிடில்டன், அந்த புகைப்படம் எடுத்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த புகைப்படம் எடுக்க முயன்ற பாப்பராஸி குறிப்பிட்ட சில காலமாக இளவரசர் ஜார்ஜை பின் தொடர்ந்து ஜார்ஜின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை கண்காணித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
















