வியட்நாமில் உள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றின் உரிமையாளர் அவருடைய ஓட்டலின் பெயரில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும், உடனடியாக அதை நீக்கும்படி அறிவுறுத்தியும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வியட்நாமில் உள்ள Nang Ganh என்ற இளம்பெண், கேட்டரிங் தொழில் புரிந்து வந்தார். இண்டர்நெட்டின் மூலம் கிடைத்த ஆர்டர்களை தயார் செய்து டெலிவரி செய்வதே அவருடைய முழுநேர தொழிலாக இருந்தது. இந்நிலையில் அவர் தனது தொழிலை விரிவுபடுத்த சொந்தமாக ரெஸ்டாரெண்ட் வைக்க விரும்பினார். ஆனால் அவரிடம் சொந்தமாக ரெஸ்டாரெண்ட் வைக்கும் அளவுக்கு முதலீடு இல்லை.
இந்நிலையில் அவருக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. ஃபேஸ்புக்கில் தன்னுடைய ரெஸ்டாரெண்டுக்கு பணம் உதவி செய்யுமாறு தனது ஃபேஸ்புக் நண்பர்களுக்கு கோரிக்கை விடுத்தார். அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பலர் அவருக்கு பண உதவி செய்தனர். தனக்கு பண உதவி செய்தவர்கள் அனைவரையும் பார்ட்னராக சேர்த்துக்கொண்டு புதிய ரெஸ்டாரெண்டை அவர் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவருடைய ரெஸ்டாரெண்ட் பெயரில் ஒரு சுலோகனை (slogan) அவர் பதிவு செய்திருந்தார். உலகில் முதல்முறையாக ஃபேஸ்புக் நண்பர்களால் உருவான ரெஸ்டாரெண்ட் என்பதுதான் அந்த சுலோகன்.
இதைக்கேள்விப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனம், இந்த சுலோகத்தை பார்ப்பவர்கள் ஃபேஸ்புக் நிறுவனமே இந்தரெஸ்டாரெண்டுக்கு உதவியதாக பலர் நினைக்கக்கூடும் தங்கள் நிறுவனத்தின் பெயரையோ அல்லது லோகோவையோ அந்த ரெஸ்டாரெண்ட் பயன்படுத்த கூடாது என்று கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் Nang Ganh கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
















