ஜெ. கைதுக்கு எதிர்ப்பு- அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம்!

jaya-protestingதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் முன்பாக அதிமுக எம்.பிக்கள் நேற்று முன் தினம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களும் சென்னையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அனைத்து எம்.எல்.ஏக்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்து எம்.எல்.ஏக்களும் கருப்பு சட்டை அணிந்து கையில் பதாகைகளுடன் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply