செக்ஸ் ஒன்று மட்டுமே ஆரோக்கியமாக வாழ சிறந்த வழி. நடிகை இலியானா ஏற்படுத்திய பரபரப்பு.

ileana-stunning-opinionபிரபல நடிகை இலியானா சமீபத்தில் ஒரு தெலுங்கு ஹெல்த் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ‘செக்ஸ் ஒன்று மட்டுமே மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்றும், செக்ஸ் மனிதனுக்கு இன்றியமையாதது மட்டுமின்றி சந்தோஷம் அளிக்கக்கூடிய ஒரே செயல் அதுமட்டுமே என்றும் மிகவும் தைரியமாக பேட்டி கொடுத்துள்ளார். அவருடைய பேட்டிக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், ஒருசிலர் அவருடைய கருத்துக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்

ஏற்கனவே இலியானா ஒரு பாலிவுட் பத்திரிகைக்கு தான் செக்ஸ் குறித்த சந்தேகங்களை தனது தந்தையிடம் 16 வயதிலேயே கேட்டு அறிந்து கொண்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது அளித்துள்ள அவருடைய போல்டான பேட்டி தெலுங்கு மற்றும் பாலிவுட் படவுலகை அதிர்வடைய செய்துள்ளது.

இலியானாவின் இந்த அதிரடி கருத்துக்கு பாலிவுட்டின் பிரபல நடிகை ராணி முகர்ஜி உள்பட பலர் வரவேற்றுள்ளனர். ஒவ்வொருவருக்கும் செக்ஸ் குறித்த விழிப்புணர்வு இருக்கவேண்டும் என்றும், செக்ஸ் குறித்து பேசுவதால் மட்டுமே ஒரு பெண்ணை தவறாக நினைக்கக்கூடாது என்றும் ராணி முகர்ஜி கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply