சிறிலங்கா விவகாரங்களில் தலையிடும் உரிமை அனைத்துலகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு வருமாறு உத்தியோகபூர்வமாக அழைக்கும் நோக்கில் மூன்று நாள் விஜயமாக இத்தாலி சென்றுள்ள மஹிந்த ராஜபக்ச அங்கு தமிழ் மக்களை சந்திக்கும் போது மேற்படி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் சிறிலங்கா மக்கள் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொய் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சில நாடுகள் இலங்கையில் குளப்பமான நிலைமையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த மஹிந்த,
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். யாரையும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
















