இரட்டை குடியுரிமை வழங்கும் நடைமுறை விரைவில் அமுல்

Sri_Lankan_passportஇரட்டை குடியுரிமை வழங்கும் நடைமுறை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இத்தாலியில் நேற்று தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இரட்டை குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் அமுலுக்குக் கொண்டு வர எதிர்பார்க்கின்றோம்.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுக்கு தீர்வு வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வெளிநாடுகளிலிருந்து ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளத் தேவையான சட்டங்கள் உருவாக்கப்படும்.

போரின் பின்னர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரையில் பயணிக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இத்தாலி மிலானோ நகரின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply