சிலருக்கு எண் ஜோதிட பிரகாரம் தீய எண்கள் அமைந்துவிடுவது உண்டு. அதற்கு பரிகாரமே இந்த பெயர் எண்.
உங்கள் பிறப்பு எண், விதி எண் என்பன உங்களுக்கு துர்அதிர்ஸ்டமாக இருந்தாலும், அதிர்ஸ்டமான எண்ணில் பெயரை அமைத்துக்கொள்வதன் மூலம் அதிர்ஸ்டசாலியாகலாம்.
இப்போது உங்கள் பெயர் எண்ணை எப்படி கணிப்பது என்பதை பார்ப்போம்.
எண் ஜோதிடத்தில் ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் எண் உள்ளது.
1 – A, I, J, Q, Y
2 – B, K, R
3 – C, G, L, S
4 – D, M, T
5 – E, H, N, X
6 – U, V, W
7 – O, Z
8 – F, P
உங்கள் பெயரை இனிஷலுடன் எழுதிக்கொள்ளுங்கள். அதன் பின் மேலுள்ளவாறு குறித்த எழுத்துக்களுக்குரிய எண்களை போட்டு கூட்டுவதன் மூலம் உங்கள் பெயர் எண்ணை கணித்துக்கொள்ளலாம்.
உதாரணம்:
Y.Dinesh = 1+4+1+5+5+3+5 = 24 = 2+4 = 6
Y.Dinesh இன் பெயரெண் 6.
இவ்வாறு உங்கள் பெயரெண்ணை கணித்துக்கொள்ளலாம்.
















