ஜனாதிபதியின் பயணத்துக்காக அதிநவீன ஆசனங்களுடன் புதிய விமானம் கொள்வனவு!

mahindanew_CIஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய விமானம் ஒன்றில் ஜனாதிபதிக்கான அதிநவீன ஆசன இருக்கை பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலமே ஜனாதிபதியின் குழாம் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளவுள்ளது.

இந்த ஆசனப் பகுதியை எயார்பஸ் கோப்பரேட் ஜெட் சென்டர் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

விமானத்துறை தகவல்களின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்களுக்காகவே இந்த புதிய விமானம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் இரண்டு டபிள் முக்கியஸ்தர்களின் இருக்கைகள் மற்றும் இரண்டு கிளப்-நான்கு முக்கியஸ்தர்களின் இருக்கைகள் மற்றும் ஹைலோ டேபிள்ஸ் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

விசேட வேண்டுகோளுக்கு அமைய இந்த இருக்கைப்பகுதி சுமார் 8 மணித்தியாலங்களுக்குள் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் 10 புதிய எயார்பஸ் விமானங்களை தருவிக்கவிருந்தது.

அதில், ஆறு ஏ330-300 மற்றும் 4 ஏ 350-900 எஸ் ரக விமானங்கள் அடங்கியுள்ளன.

இதில் ஒன்று ஏற்கனவே இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலேயே ஜனாதிபதிக்கான விசேட இருக்கை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Tags: , ,

Leave a Reply