தமிழீழம், தமிழக அரசியல் தலைவர்கள், புலம்பெயர் தமிழர்களையும் மறக்கவேண்டும் என மோடி தெரிவித்தார்: சுவாமி!

subramanianswamyதமிழீழத்தையும், தமிழக அரசியல் தலைவர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் மறந்து விடுமாறு மோடி தெரிவித்துள்ளார் என ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு செய்தி வழங்கும்போதே சுப்பிரமணியன் சுவாமி மேற்படி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் நரேந்திர மோடியின் அந்த அறிவுரையை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஏனைய கட்சிகளும் பின்பற்றி இலங்கையின் இனப்பிரச்சனையை தீர்க்க முன்வரவேண்டும் என ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மோடி பிரதமரான பின் அவரை சந்திக்க சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், தமிழகத்திலும் பாரதீய ஜனதாக்கட்சியினரை சந்தித்ததும், அதன்பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க வாய்ப்பை வழங்காமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply