மூன்று ஆண்ட்டிகளை வைத்து சமாளிக்கும் சுந்தர் சி. கோலிவுட் ஆச்சரியம்

sundar-C-next-movieஅரண்மனை வெற்றிப்படத்தை அடுத்து சுந்தர் சி இயக்கும் ‘ஆம்பள’ படம் முழுக்க முழுக்க காமெடி படம் என படக்குழுவினர் கூறுகின்றனர். தனது முந்தைய படத்தில் த்ரில்லர் கலந்த காமெடியை கொடுத்த சுந்தர் சி, இந்த படத்தில் கிளாமர் கலந்த காமெடியை அள்ளி தெளிக்க உள்ளாராம். அதுவும் ஹீரோயின் கிளாமர் இல்லை. ஆண்ட்டி கிளாமர் என்பதுதான் சுந்தர் சியின் புது ஆங்கிள்.

ஹீரோ விஷாலுக்கு மூன்று அத்தைகள். ரம்யா கிருஷ்ணன், கிரண், மற்றும் ஐஸ்வர்யா. இந்த ஐஸ்வர்யா எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று அத்தைகளுக்கும் ஆளுக்கொரு மகள். ரம்யா கிருஷ்ணன் மகளாக ஹன்சிகா, கிரணுக்கு மகளாக மதுரிமா, மற்றும் ஐஸ்வர்யாவுக்கு மகளாக மாதவி லதா. மூன்று அத்தைகளும் தங்கள் மகளை விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகின்றனர். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் கதை.

இந்த படத்தில் ஹீரோயின்களுக்கு சமமாக ஆண்ட்டி நடிகைகளும் கிளாமரில் கலக்க உள்ளார்களாம். சுந்தர் சியின் முந்தைய படத்திலும் மூன்று ஹீரோயின்கள் எனப்து குறிப்பிடத்தக்கது. ஒரு ஹீரோயினுக்கே முக்கியத்துவம் கொடுக்காத தமிழ் சினிமா உலகில் மூன்றை வைத்துக்கொண்டு எப்படி கதையை சமாளிக்கிறார் சுந்தர் சி என்பதுதான் தற்போதைய கோலிவுட் இயக்குனர்களின் ஆச்சரியமான கேள்வி.

Tags: , ,

Leave a Reply