அமெரிக்காவை அரவணைக்க துடிக்கும் இலங்கை

usa-flag2இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடவுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியூயோர்க்கில் அவ்வாறான ஓர் சந்திப்பே அண்மையில் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், இலங்கை குறித்த நிலைப்பாட்டை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாகவோ அல்லது கெரியுடனான சந்திப்பு குறித்தே அரசாங்கம் எவ்விதமான உத்தியோகபூர்வமான அறிக்கைகளையும் வெளியிடவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா மென்மையாக்கியுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால், அவ்வாறு நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சான்கி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

ஜனாதிபதிக்கும் கெரிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்த ஊகங்களின் அடிப்படையில் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்ததாகவும் அவை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையல்ல எனவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும், அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக இவ்வாறான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Tags: , ,

Leave a Reply