போர்க்கப்பல் திடீர் மாயம். மலேசியாவை துரத்தும் துரதிஷ்டம்.

shipமலேசிய விமானம் MH 370 என்ற விமானம் கடந்த மார்ச் மாதம் 239 பயணிகளுடன் மாயமாய் மறைந்து அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலேசியாவின் MH 17 என்ற விமானம் உக்ரைன் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு அதில் பயணம் செய்த 283 பயணிகளும் பரிதாபமாக பலியாகினர். இந்த இரண்டு சோக சம்பவங்களின் அதிர்ச்சியையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் மலேசிய மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது பட்ட காலிலேயே படும் என்ற பழமொழிக்கேற்ப மலேசியாவுக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 7 பணியாளர்களுடன் திடீரென காணாமல் போனது. இதனால் மலேசியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலேசிய ராணுவத்திற்கு சொந்தமான CB90H என்ற போர்க்கப்பல் நேற்று புலாவ் லயாங் லயாங் பவளத்தீவு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ரேடாரில் இருந்து காணாமல் போனது. மோசமான வானிலை தொடர்ந்து நிலவுவதால் ரோந்து பணியிலிருந்து திரும்புமாறு கொடுக்கப்பட்ட கட்டளையை அந்த கப்பல் பெற்றதா என்பது கூட தெரியவில்லை.

மலேசிய போர்க்கப்பல் ரோந்து செல்லும் பகுதி முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் மலேசிய போர்க்கப்பல் திடீரென மறைந்தது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. காணாமல் போன போர்கப்பலை தேடும் பணியில் 3 போர் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அக்கப்பல் கடைசியாக புலாவ் மங்களும் என்ற இடத்திலிருந்து வடகிழக்கில் 20 மைல் தொலைவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானப்படை விமானங்களும் இப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply