தந்தை தனது 13 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பிணி ஆக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவமானது மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பகல்ல எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது, பாதிப்பிற்கு உள்ளான சிறுமி தம்பகல்ல பிரதேசத்தில் கல்வி கற்றுவரும் மாணவியாவார். இம் மாணவச் சிறுமி காலில் ஏற்பட்ட காயம் ஒன்றிற்கு மருந்து கட்டுவதற்காக சிலாபம் வைத்தியசாலைக்கு சென்றவேளை அங்கு பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி கற்பம் தரித்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனை அடுத்து வைத்தியர் சிறுமியை விசாரித்த வேளை அவரது தந்தையால் இரண்டு வருடங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து வைத்தியர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். சந்தேக நபரான சிறுமியின் தந்தை தற்போது பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர் கொலை குற்றச்சாட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் விளக்கமறியலில் இருந்து வந்துள்ளவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக மாதம்பை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















