சர்வ தேசத்திற்க்கும் இலங்கை மக்களுக்கும் போலியான வாக்குறுதிகளை அளிப்பதை இலங்கை கைவிடவேண்டும்

Amnesty_Internationalசர்வ தேசத்திற்க்கும் இலங்கை மக்களுக்கும் போலியான வாக்குறுதிகளை அளிப்பதை இலங்கை கைவிடவேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கையில் இன்னமும் மோசமான நிலையிலுள்ள மனித உரிமை நிலவரத்தை சீர்செய்வதாக சர்வதேச சமூகத்திற்க்கும் இலங்கை மக்களுக்கும் போலியான வாக்குறுதிகளை அளிப்பதை இலங்கை கைவிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெனீவாவில் ஐ.நா மனிதஉரிமை குழு இலங்கை தொடர்பாக இன்றும் நாளையும் ஆய்வு செய்யவுள்ள நிலையிலேயே மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

2002 இல் இலங்கை குறித்து இறுதியாக இடம்பெற்ற ஆய்வின் போது சுட்டிக்காட்டப்பட்ட மனித உரிமை கரிசனைகளில் பெரும்பாலானவை காணப்படுகின்றன, இவை குறித்து தீர்வு காணப்படும் என அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் மீறியுள்ளது. என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியா பசுவிக்கிற்கான பிரதி இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மாற்றுக் கருத்தையும், உடன்பட மறுத்தலையும் கட்டுப்படுத்த மிகமோசமான சட்டங்களை பயன்படுத்துகிறது. சித்திரவதையும், பலவந்தமாக காணமற் செய்யப்படுதலும், தொடர்கின்றன, இதேவேளை கருத்துச் சுதந்திரமும் ஒன்று கூடுவதற்கான உரிமையும் மீறப்படுகின்றன.

சிறுபான்மை மதங்களுக்கு எதிராக அதிகரித்துவரும் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவேண்டும்.

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி நபர்களை உரிய நடைமுறையின்றி தடுத்துவைக்கின்றது- தன்னுடன் உடன்பட மறுப்பவர்களை மௌனமாக்க அதனை பயன்படுத்துகிறது. என்றும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கை அரசாங்கம் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதனை நிறுத்திக்கொள்ள வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் மனித உரிமை நிலைமைகள் குறித்து வெற்று வாக்குறுதிகளை அரசாங்கம் அளிப்பதனை நிறுத்திக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து இன்றும் நாளையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கமிட்டியில் ஆராயப்பட உள்ளது.

மாற்றுச் சிந்தனையாளர்களை ஒடுக்குவதற்கு தொடர்ந்தும் இலங்கையில் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

சித்திரவதைகள் மற்றும் பலவந்தமான கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

சிறுபான்மை மதச் சமூகங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் உயர்வடைந்துள்ளதாகவும் இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டுமெனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பிரதிப் பணிப்பாளர் டேவிட் கிரிப்த் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் காலத்திற்கு காலம் உறுதிமொழிகளை அளித்தபோதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தொடர்ச்சியாக பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மாற்று சிந்தனையாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் தரப்பினரை அடக்கி ஒடுக்கும் நோக்கில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

18ம் திருத்தச் சட்டம் ரத்துசெய்யப்பட்டு வேறும் சட்ட மூலமொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டியது அவசியமானது னக அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கிலும் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஸ 18ம் திருத்தச் சட்டத்தை பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply