இலங்கையில் தேசிய தேர்தல் ஒன்றுக்கு ஆயத்தமாகுமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, துணைத் தேர்தல் ஆணையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்திற்கு அனைத்து துணைத் தேர்தல் ஆணையாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் முக்கியமாக தேர்தல் ஒன்றின் போது எதிர்நோக்க நேரிடும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன் தேசிய தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தேவையான முதல் கட்ட பணிகள் அனைத்தையும் செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2014ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு குறித்த பணிகளை மிக விரைவில் பூர்த்தி செய்யுமாறு கோரியுள்ளார்.
எனினும் தேர்தல் நடாத்துவது குறித்தோ தேர்தல் எப்போது ஆரம்பிக்கப்படும் என்றோ தேர்தல் ஆணையாளரோ திணைக்களமோ உத்தியோகபூர்வமாக எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
















