அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 சந்தையில் மிக்க வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத் தொலைபேசி காற்சட்டைப் பையில் வைக்கும்போது வளைவதாக முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து புதிதாக ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது.
ஐபோன் 6 ஐ காதில் வைத்துப் பேசும் போது, அதன் பின்புற அலுமினிய பகுதிக்கும், முன்புற திரைக்கண்ணாடிக்கும் இடையில் உள்ள நுண்ணிய இடைவெளியில் தலைமுடி சிக்கி உடைந்து விடுகின்றதாம்.
இதனை கருத்துப்படுத்தி ஐபோன் 6 ஐ சேவிங் ரேசராக கூட பயன்படுத்த முடியும் என சில நகைச்சுவையான படங்களும் சமூக வலைத்தளங்களில் வலம்வரத் தொடங்கியுள்ளன.
















