நீ நான் நிழல்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமாரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. சண்டமாருதம்’ படத்திற்கு முன்பே சரத்குமார் நடித்திருக்கும் படம் ‘நறுமுகையே’. இப்போது இந்தப் படத்தின் பெயரை ‘நீ நான் நிழல்’ என்று மாற்றம் செய்திருக்கிறார்கள். இதுவொரு மலேசிய இந்திய கூட்டு தயாரிப்பில் உருவாகும் திரைப்படம். இந்தப் படத்தில் சரத்குமாருடன் மனோஜ் கே.ஜெயன், அஜ்மல், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மலேசிய பெண் திசுந்தா இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜான் ராபின்சன் இயக்கி உள்ளார்.
இதில் சரத்குமார் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் பெரும்பகுதி மலேசியாவில்தான் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. ஃபேஸ்புக் காதல் ஃபேஸ்புக்கால் நடக்கும் அடுத்தடுத்த கொலைகளும் அதன் பின்னனியும்தான் ‘நீ நான் நிழல்’ படத்தின் கதை. மலேசியாவில் ஐந்து பேர் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். கொலைகளுக்கான காரணம் தெரியாமல் அந்த நாட்டு அரசே குழம்பிப் போகிறது. ஃபேஸ்புக் கொலை அப்போதுதான் அந்நாட்டு போலீஸ் அதிகாரிக்கு ஒரு க்ளூ கிடைக்கிறது.
அதாவது ஒரு ஃபேஸ்புக் அழைப்புதான் இந்த கொலைகளின் பின்னணியில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அடுத்த கொலை விழும் முன் கொலையாளியைக் கண்டுபிடிக்க முனைகிறார். மலேசியாவில் ஹீரோ அதே நேரம், இந்தியாவில் ரோஹித் என்ற நபருக்கு, அதே பேஸ்புக் அழைப்பு வருகிறது. அதன்பேரில் மலேசியா கிளம்புகிறான் ரோஹித். போன இடத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் ‘நீ நான் நிழல்’ படத்தின் மீதி கதை. நட்சத்திர பட்டாளம் இதில் ஹீரோவாக சரத்குமார் நடித்துள்ளார்.
அவருடன் அர்ஜூன் லால், மனோஜ் கே ஜெயன், இஷிதா, எம்.எஸ். பாஸ்கர், தேவன், ப்ளாக் பாண்டி, காதல் அருண், சூப்பர் குட் லட்சுமணன், நிகிதா, ஸ்ருதி, பகத், லட்சுமி ப்ரியா, பாத்திமா பாபு என பெரும் நட்சத்திரக் கூட்டமே படத்தில் இடம்பெற்றுள்ளனர். ஜான் ராபின்சன் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜான் ராபின்சன். இவர் 12 ஆண்டுகள் கே எஸ் அதியமான் மற்றும் மேஜர் ரவி ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். படத்துக்கு நஸீர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிகில் வேணு எடிட்டிங் செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
















