இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு முழு ஆதரவு: பிரித்தானியா உறுதி!

uk_flagஇலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு முழு ஆதரவு வழங்குவதாக பிரித்தானிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இது தொடர்பான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது, இதில் புலம்பெயர்ந்த தமிழர்கள், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலக தமிழர் பேரவை மற்றும் சில தமிழ் அமைப்புக்களும் இணைந்து பிரித்தானியாவின் உதவி வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதன் போது ஹுகோ ஸ்வை, இலங்கையின் இறுதி சமாதானத்துக்காக தமது நாடு தொடர்ந்து பாடுபடும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் மேற்கொள்ளும் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு தமது அரசாங்கம் உறுதியான ஆதரவை வழங்கும் எனவும் உறுதியளித்தார்.

Tags: , ,

Leave a Reply