பிரிட்டனில் இலங்கையர்கள் அடைக்கலம் பெறுவதற்காக சட்டத்தரணிகளின் ஆலோசனையுடன் தங்களை சித்திரவதைக்குட்படுத்தி கொள்வதாக பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டனை இது குறித்து விசாரணைசெய்யுமாறும் அது கோரியுள்ளது.
சட்டத்தரணிகளின் அறிவுறுத்தல்களுக்க ஏற்ப இலங்கையர்கள் அடைக்கலம் பெறுவதற்காக தங்களுக்கு காயங்களை ஏற்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு பிரிட்டனில் இது இடம்பெறும் இடங்களையும் குறிப்பிட்டுள்ளது.
பின்னர் இவர்கள் தங்கள் புகலிடக்கோரிக்கைகளுக்கு வலுசேர்ப்பதற்காக மருத்துவர்களிடமிருந்து சான்றிதழ்களை பெறுவதாகவும், இலங்கையில் யுத்தத்திற்க்கு பின்னரும் சித்திரவதைகள் பரந்துபட்ட அளவில் வாதாடுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காயங்கள் இலங்கையிலோ அல்லது படைகளாலோ ஏற்படுத்தப்பட்டவையல்ல, மாறாக பிரிட்டனிலேயே ஏற்படுத்தப்பட்டவை , காயங்கள் அவர்களுடைய ஒப்புதலுடன் ஏற்படுத்தப்பட்டவை, அடைக்கலம் கிடைக்கும் என்ற உத்தரவாதத்துடன் அவை ஏற்படுத்தப்படுகின்றன, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















