புலிகள் ISIS அமைப்புக்கு நிகரானவர்கள்: ஜெனீவாவிற்கான இலங்கை பிரதிநிதி தெரிவித்துள்ளார்..!

LTTE 1_CIபயங்கரவாதம் என்பது தொடர்ந்தும் இலங்கையின் கரிசனைக்குரிய விடயமாக உள்ளதால் பயங்கரவாத தடைச்சட்டம் நீடிப்பது அவசியம் என ஜெனீவாவிற்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசின்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்றதா என்பதை ஆராயும் ஐ.நா மனித உரிமை குழுவின் கூட்டத்தொடரில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடைதொடர்ந்தும் நீடிப்பது தங்கள்கரிசனைகள் சரியானவை என்பதை உறுதி செய்லவதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஐ.எஸ்ஐஎஸ் அமைப்புடனும் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் பிரதிநதியொருவர் சர்சதேச அளவில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இந்த அமர்வில் பட்டியலிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply