மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் அவசரமாக அலரிமாளிகைக்கு மாற்றம்!

mahinda-rajapaksa4-600மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் அவசரமாக பிரச்சாரத்திற்கு பொறுப்பான அமைச்சர் பசில் ராஜபக்சவினால் அலரிமாளிகைக்கு இடமாற்றம் செய்யப்படுள்ளது.

இந்த அலுவலகமானது மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அலுவலகம் அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில், கொழும்பு 7 கிறகரி வீதியில் கடந்த 25 ம் திகதி திறந்து வைக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் அந்த நிகழ்வை பகிஷ்கரித்திருந்தனர்.

இன் நிலையில் அலரிமாளிகயில் மஹிந்தவின் மகனான நாமல் ராஜபக்சவின் அலுவலகம் இருந்த இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதனை அடுத்து நாமல் ராஜபக்ச தனது அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார்.

பிரச்சார அலுவகம் அலரிமாளிகைக்கு மாற்றப்பட்டதில் பல உள்நோக்கங்களும் உள்ளதாக ஆளும் கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

Tags: , ,

Leave a Reply