மஹிந்த வரும்போது 2500 ரூபா பெறுமதியான நீல நிற சேலை அணிய வேண்டும்: கட்டாயப்படுத்தும் பாடசாலைகள்

mahindanew_CIஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண வருகையின் போது பாடசாலைகள் சிலவற்றில், ஆசிரியைகள் கட்டாயம் நீலநிறச் சேலைகளே அணிந்து வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அணியும் சேலையின் பெறுமதியும் 2,500 என்றும், அந்தச் செலவையும் ஆசிரியைகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நாள் பயணமாக வடபகுதிக்கு எதிர்வரும் 12ஆம் திகதி யாழிற்கு மஹிந்த விஜயம் செய்யவுள்ளார். 12ஆம் திகதி கிளிநொச்சியிலும், 13,14ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு நிகழ்வகளில் பங்கேற்கவுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகை தரும் போது அவரது கட்சியினுடைய நிறமாகிய நீலநிறத்தில் ஆசிரியைகள் சேலை அணிய வேண்டும். அதற்காக சம்பளப் பணத்திலிருந்து 2,500 பெறப்பட்டு எதுவித கேள்வி கோரலும் இல்லாமல் அவசர அவசரமாக நீலநிற சேலைகள் அந்தப் பாடசாலைகளால் கொள்வனவு செய்யப்படுகின்றது.

நீலநிறச் சேலை அன்றைய தினம் அணிய வேண்டும் என்றால் அணியலாம். ஆனால் அதற்கு விலை குறைந்த சேலைகளை வாங்கியிருக்க முடியும். இவ்வாறு பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து ஒரு நாள் கூத்துக்காக சேலை வாங்குமாறு நிரப்பந்திக்கக் கூடாது என்று ஆசிரியையகள் கலலை தெரிவித்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply