இன்று உலக கண்பார்வை தினம்…!!

eyesஉலக கண் பார்வை தினம் இன்று 09ஆம் திகதி அனுஷ்டிக்கப் படுகிறது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தலைமையில் காலை கொழும்பு விகார மஹாதேவிப் பூங்காவில் இருந்து மக்களைத் தெளிவுபடுத்தும் பாதயாத்திரை நடை பெறும். உலக சனத் தொகையில் 39 மில்லி யனுக்கும் மேற்பட்டோர் கண் பார்வை அற்ற வர்கள்.

28 மில்லியன் பேர் பார்வை குறைபாடு உள்ளவர்கள். 80 வீதமானோர் குணப்படுத்தக்கூடிய நிலையில் உள்ளனர். மூன்றாம் உலக நாடுகளிலேயே கண்பார்வை குறைந்தவர்கள் கூடுதலான எண்ணிக்கையில் காணப்படு கின்றனர்.

இலங்கையில் 02 இலட்சத்துக்கும் மேற்பட்ட வயது வந்தோர், குழந்தைகள் பார்வையின்றி அல்லற்படுகின்றனர். இதில் 70 வீதமானோர் கண்ணில் வெள்ளை படர்வதால் குருட்டுத்தன்மையை அடைந்துள்ளனர்.

சுகாதாரக் கல்விப் பணியகம் இன்று காலை சுகாதாரக் கல்விப் பணியகத்தில் ஊடகக் கருத்தரங்கொன்றையும் நடத்தும்.

Tags: , ,

Leave a Reply