இன்றைய ராசி பலன் – 10.10.2014

astrology2மேஷம்: இன்று, உங்கள் நண்பரிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி நிறைவேற்ற அனுகூல சூழ்நிலை அமைந்து உதவும். தாராள பணவரவில், ஒரு பகுதியை பணக்கடனுக்காக செலுத்துவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்: இன்று, உங்கள் மீது அவப்பெயர் வராத வகையில் செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மையை பாதுகாப்பது அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனப் பயணத்தில் மித வேகம் பின்பற்றவும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால், மனம் இலகுவாகும்.

மிதுனம்: இன்று, வாழ்வில் முன்னேற்றம் பெற உதவும் வகையில், முக்கியஸ்தரின் அறிமுகம் ஏற்படும். வெற்றியை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, தேவையான அனுகூல காரணி பலம் பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விஷேசத்தில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்: இன்று, உங்கள் செயல்களில் திறமையின் வெளிப்பாடு தெரியும். எதிர்மறையாக இருந்த சூழ்நிலை விலகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தகுந்த பணிபுரிவீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். இல்லறத்துணையின் அன்பில் மகிழ்வீர்கள்.

சிம்மம்: இன்று, உங்களின் வெளிவட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். சகிப்புத்தன்மையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். முக்கிய செலவுக்கு சேமிப்புப் பணம் பயன்படும். சீரான ஓய்வு உடல்நலம் காக்கும்.

கன்னி: இன்று, உங்கள் மனதில் சோர்வு ஏற்படலாம். சிறிய பணி கூட கடினமாக தோன்றும். தொழில், வியாபார நடைமுறை சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். இல்லறத்துணையின் ஆறுதல் வார்த்தை நிம்மதி தரும்.

துலாம்: இன்று, கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். உங்களின் தனித்திறமை முக்கியமான செயல் நிறைவேற உதவும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: இன்று, அடுத்தவர் நலனில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவீர்கள். நண்பரின் கவனக்குறையை சரிசெய்வீர்கள். தொழில், வியாபார தொடர்பு பலம் பெறும். உபரி பணவருமானத்தில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

தனுசு: இன்று, உங்களின் செயலில் நிதானம் பின்பற்ற வேண்டும். நண்பரை பாராட்டுவதில் அவரின் மனம் அறிந்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உருவாகும் குளறுபடியை சரிசெய்ய புதிய அணுகுமுறை பின்பற்றுவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.

மகரம்: இன்று, உங்களின் அருமை தெரியாதவர்களிடம் சுய பெருமை பேச வேண்டாம். தொழில், வியாபார நடைமுறை தாமதகதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். விஷப்பிராணிகளிடம் இருந்து விலகுவது நல்லது.

கும்பம்: இன்று, உங்கள் பேச்சில் வாழ்வியல் தத்துவம் மிகுந்திருக்கும். தொழில், வியாபாரம் செழித்திட, அதிக அளவில் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் இயன்ற அளவில் உதவி புரிவீர்கள்.

மீனம்: இன்று, உங்கள் மனதில் தேவையற்ற வகையில் நம்பிக்கை குறைவு ஏற்படலாம். அரசின் சட்ட திட்டங்களை மதித்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரம் கூடுதல் உழைப்பால் சீராகும். முக்கிய செலவுக்காக கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். மாணவர்கள், அக்கறையுடன் படிப்பதால் சராசரி தேர்ச்சி கிடைக்கும்.

Tags: 

Leave a Reply