மியன்மாரை அண்மித்த கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள படகுகளை சட்டரீதியில் நாட்டிற்கு மீள கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. 40 இற்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் மியன்மார் கடற்பரப்பில் உள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில், மியன்மார் மற்றும் பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடி, உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, குறித்த படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக மீன்பிடித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லால் டி சில்வா தெரிவித்தார். படகிலுள்ள மீனவர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
















