புகலிடக் கோரிக்கையாளர்களை நவ்ரு, மனுஸ் தீவுகளில் அனுப்புவதை கண்டித்தும் நவ்ரு முகாமில் அகதிகளை துன்புறுத்தும் சம்பவத்தைத் எதிர்த்து நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை அகதிகள் அதிரடி கூட்டனி அமைப்பு ஏற்ப்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக அகதிகள் அதிரடி கூட்டனி அமைப்பாளர் இயன் ரிண்டோல் தெரிவித்ததாவது,
மொரிசன் தற்போது புதிதாக கைசாத்திட்டுள்ள கம்போடியா ஒப்பந்தம் மற்றும் புதிய விசா நடைமுறை அனைத்தும் அகதிகளுக்கு உகந்தது அல்ல.
தீவுகளில் வைத்து விசாரணைகளை நடத்துவது மீண்டும் அவர்களை புறக்கணிப்பது போன்ற நடவடிக்கை காரணமாக மிகவும் துன்பகரமான சம்பவங்கள் தற்போது நிகழ்கின்றது..
அவுஸ்திரேலியா அகதிகளை வரவேற்கும் நாடு அகவே நிரந்தர பாதுகாப்பு விசா நடைமுறை படுத்த வேண்டும்.
இந்த ஆர்ப்பட்டமானது நாளை சிட்னி மற்றும் மல்போர்ன் ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் நாளை சிட்னி டவுன் கோள் முன்பாக 2.00 மணியளவில் இடம்பெற உள்ளதாக இயன் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















