மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்படுவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 150 லட்ச ரூபா பணம் செலவிட்டு நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்படுகின்றன.
நாட்டையோ நாட்டு மக்களையோ கருத்திற்கொண்டு அமர்வுகள் நடத்தப்படுவதில்லை.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்களை பாதுகாக்க நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்படுகின்றன.
மோசடிகளில் ஈடுபடுவோர், சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோர், ஏகாதிபத்திய நிர்வாகத்தில் ஈடுபடுவோரை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற சட்டத் திருத்தங்களை செய்ய உள்ளது.
உள்ளூராட்சி மன்ற கட்டமைப்பை பலப்படுத்தக் கூடிய வகையில் இந்த நேரத்தைப் பயன்படுத்த முடியாதா?
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட, சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட உள்ளூராட்சி மன்றத் தலைவர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்கின்றேன்.
ஏனெனில், உள்ளூராட்சி மன்ற விவகார அமைச்சர் ஓர் சிறுபிள்ளைதானே. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை உயர்த்த முடியும்.
குறைந்தபட்சம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு முச்சக்கர வண்டி ஒன்றையேனும் வாங்கிக் கொள்ளக் கூடிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
உள்ளூராட்சி திருத்தச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
















